வீடு கட்டும் முன் கவனிக்க வேண்டிய முக்கியமான டிப்ஸ்கள் ! வீடு கட்டும் முன் கவனிக்க வேண்டிய முக்கியமான டிப்ஸ்கள் ! - ETbuild

வீடு கட்டும் முன் கவனிக்க வேண்டிய முக்கியமான டிப்ஸ்கள் !

மனையை சீரமைத்தல், மரம் செடி கொடிகளை நடுதல், மண் பரிசோதனை, குடிநீர் பரிசோதனை மேற்கொள்ளுதல், 
அஸ்திவாரப் பணிகளின் போது கரையான் மற்றும் பலவித பூச்சிகளை ஒழிக்க வல்ல பெஸ்ட் கன்ட்ரோல் என்கிற பூச்சி தடுப்பு முறையை மேற்கொள்ளுதல் 

ஆகியனவற்றை வீடு கட்டுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய முதற்கட்டப் பணிகள் என வகைப் படுத்துகிறார்கள் கட்டிட வல்லுனர்கள். அது குறித்த ஆலோசனைகள் இதோ:

* நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள நிலத்தில் உள்ள மண் எத்தகைய தன்மை கொண்டது? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். 
அதன் மேல் கட்டப்படும் கட்டடத்தைத் தாங்கக் கூடிய சக்தி அதற்கு இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* தரை மட்டத்திற்குக் கீழ் உள்ள மண் அடுக்குகளின் அமைப்பு எத்தகையதாக இருக்கிறது? 

பளுவைத் தாங்குமா? உள்ளுக்குள் அமிழ்ந்து போக வைக்குமா? உறுதி எப்படி?

பாறைகள் நிறைந்திருக்குமா? தண்ணீர் தேங்குமா? களிப்பாகித் தொல்லை தருமா? நீரை உறிஞ்சுமா? தேக்கி வைக்குமா? 

தரைக்குள் நீர் உள்ளே நுழைய அனுமதிக்குமா? உள்ளே நுழையும் நீர் தங்கி இருக்குமா?

வடிகால் வசதி எப்படி? வெறும் கால்களால் நடந்து போக ஏற்றதா? மேற்பரப்பில் காணப்படுவதைப் போலவே 

எவ்வளவு ஆழத்திற்கு அதே மண் இருக்கும்? என்பதை யெல்லாம் நன்கு ஆராய வேண்டும்.

* மேலும், இந்தப் பகுதியில் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைக்க வசதிப்படுமா? ஆழ்துளைக் கிணறுதான் பொருத்தமாக இருக்குமா? 
எவ்வளவு ஆழத்தில் நீர் கிடைக்கும்? மண்ணின் வகை என்ன? வண்டலா? களிமண்ணா? குறுமண்ணா? மணலா?

சவுடா? மண்ணுக்குள் நச்சுத் தன்மை கொண்ட ஊடுருவல் நடந்திருக்கிறதா? அதைத் தடுக்க முடியுமா? 

நச்சுத் தன்மை கொண்ட மண்ணை மாற்றி அமைக்க வழி இருக்கிறதா?கறையான் முதலிய தொந்தரவுகள் வராமல் இருக்குமா? 

புற்று வளருமா? மரம், செடி கொடிகளை வளர்க்க ஏற்றதா?

வீட்டுத் தோட்டம் பலன் தருமா? கட்டுமானத்தை உறுதி யாக்குவதற்குச் செய்ய வேண்டிய முன்னேற் பாடுகளுக்கு அதிகம் செலவு வைக்குமா? 
கட்டி முடித்த பின் கழிவு நீர் வெளியேற்றத்திற்கு உதவுமா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

* தரையின் உறிஞ்சும் தன்மை எப்படி?தரைப் பரப்பை மூட வேண்டியது அவசியமா? அப்படியே விட்டு வைக்க ஏற்றதா? 

கான்கிரீட், ஓடு, கல் பாவ வேண்டுமா? அதற்கு அதிகம் செலவு வைக்குமா?கன ரக இயந்திரங்களைக் கொண்டு வந்து இயக்க வசதிப்படுமா?

இயந்திரங் களுக்கான தாங்கிகளை அமைக்க இடம் கொடுக்குமா? முளைகளை அடித்து 

இறக்குவதற்கு ஏற்ற இறுக்கம் கிடைக்குமா? என்பதையும் நன்கு சோதித்து அறியுங்கள்.

* ஆரம்ப கட்ட மண் பரிசோதனை முயற்சிகளுக்குச் சங்கடப்பட்டுக் கொண்டு விட்டு விடாதீர்கள். 

சில ஆயிரம் செலவழித்து மண் பரிசோதனை மேற்கொண்டால் அதுதான் உங்கள் கனவு வீட்டின் உண்மையான அஸ்திவாரம்.

அதே போன்று நிலத்தடி நீர் பரிசோதனையும் மேற்கொள்ளத் தவறாதீர்கள். நிலத்தடி நீர் நன்றாக அமைந்து விட்டால் 

உங்கள் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான தண்ணீரை வெளியி லிருந்து வாங்க வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* பெஸ்ட் கன்ட்ரோல் தரமாக அமையும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அஸ்திவாரப் பணிகளுக்கு முன்பும், 

பின்பும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வகையான பெஸ்ட் கன்ட்ரோல் முறைகளைப் பற்றி நிபுணர்களிடம் கேட்டறிந்து செயல் படுத்துங்கள்.
முக்கிய குறிப்பு:-

பணம், நேரம், கட்டுமானப் பொருள் மிச்சம் செய்யும் RAT TRAP BOND கட்டுமானம் மற்றும் இதர வழி முறைகளைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிய
Previous Post Next Post
COMMENTS... plz use me