மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா? மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா? - ETbuild

மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

மின்சாரத்தின் அருமை, மின்வெட்டு நேரமான இந்தக் கோடைகாலத்தில் நமக்கு நன்கு தெரியும். அதிகளவிலான மின்சாரத்தைப் பெற நாம் `ஜெனரேட்டர்’ எனப்படும் மின்னாக்கிகளைப் பயன்படுத்துகிறோம்.
மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா?
மின்கலங்களில் இருந்து நம்மால் மிகக் குறைவான மின்சக்தியைத்தான் பெற முடியும். மின்னாக்கிகளில் எந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. பெரும் மின்னாக்கிகளை இயக்க `டர்பைன்கள்’ பயன்படுகின்றன. 
 
உலகில் மூன்றில் இரண்டு பங்கு மின்நிலையங்களின் மின்னாக்கிகளில் நீராவி டர்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன. மற்றவற்றில், டர்பைன்களைச் சுழலச் செய்ய நீர் பயன்படுகிறது. இவற்றை நீர்மின் நிலையங்கள் என்கிறோம். 
சில மின்னாக்கிகள், பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன. சில பண்ணைகளில் காற்று டர்பைன்களை பயன்படுத்துகிறார்கள். 
 
பொதுவாக இருக்கும் மின் நிலையங்களில், கொதிகலன்களை எரிபொருளை எரித்துச் சூடாக்கி, அதிக அழுத்தத்தில் நீராவியை உண்டாக்குகிறார்கள். வெளியேறும் நீராவி, டர்பைனை சுழலும்படி செய்கிறது. 
 
மிகப்பெரிய நீராவி டர்பைன் மின்னாக்கிகள், 500 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்னாற்றலை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்னாற்றல், 50 லட்சம் விளக்குகளை எரியவைக்கப் போதுமானதாகும். 
 
ஒரு மின்நிலையத்தில் இதைப் போன்ற பல டர்பைன்கள் இருக்கும். கொதிகலன்களை வெப்பப்படுத்த எல்லா வகையான எரிபொருட்களையும் பயன்படுத்துகிறார்கள். 
பழங்காலத்தில் அமைக்கப்பட்ட எல்லா மின் நிலையங்களிலும் எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. இன்று நிலக்கரியை பெரும் துண்டுகளாக எரிக்கப் பயன்படுத்துவதில்லை. 
 
மாறாக, அதை மென்மையான தூளாக்கிப் பயன்படுத்துகிறார்கள் நீர் மின்நிலையங்கள், உயரத்தில் இருந்து விழும் நீரின் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. 
குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது?
மேலிருந்து விழும் நீர், நீர் டர்பைன்களை சுழலச் செய்கிறது. டர்பைன்கள் மின்னாக்கிகளை சுழலச் செய்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. உலகில் அமைக்கப்பட்ட மிகப் பெரிய மின்திட்டங்கள் எல்லாம் நீர்மின் திட்டங்கள் தான். 
 
பல மின்நிலையங் களில் எண்ணையை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இயற்கை வாயு அதிகமாகக் கிடைக்கும் இடங்களில் அதை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். 
 
எளிதில் மின்சாரத்தைப் பெற இன்று டீசல் என்ஜின்களைப் பயன்படுத்துகிறார்கள். சாதாரண நீராவி டர்பைன்களை இயக்க முதலில் அவற்றை குறிப்பிட்ட வெப்பநிலைக்குச் சூடுபடுத்த வேண்டும். 
 மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா?
ஆனால், டீசல் என்ஜின்களை உடனே இயக்க முடியும். அணுமின் நிலையங்களில், நீரை வெப்பப்படுத்தி நீராவி ஆக்குவதற்கான வெப்பத்தை அணுக்கரு உலையிலிருந்து பெறுகிறார்கள். 
 
அதன் பின் நீராவி, டர்பைனை இயக்கி மின்சாரத்தைக் கொடுக்கிறது. அணுக்கரு உலையில், அணு உட்கரு சிதைவடைவதால் ஏராளமான வெப்ப ஆற்றல் கிடைக்கிறது. 
ருசியான ஆரஞ்சு பிரியாணி செய்வது எப்படி?
உட்கருவை ஒரு கட்டுப்பாடான நிலையில் சிதைவடையச் செய்து சீரான வெப்பத்தைப் பெறுகிறார்கள். 
 
அணுமின் நிலையத்தில் சில அடிப்படை அமைப்புகள் இருக்கின்றன. அவை, அணுக்கரு உலை, உயிரியல் தடுப்பு வெப்ப மாற்றிகள் மற்றும் மின்னாக்கி ஆகும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me