எம் சாண்ட் என்பது எப்படி தயாரிக்கிறார்கள்? #MSand எம் சாண்ட் என்பது எப்படி தயாரிக்கிறார்கள்? #MSand - ETbuild

எம் சாண்ட் என்பது எப்படி தயாரிக்கிறார்கள்? #MSand

எம்-சாண்ட் பற்றி இன்னமும் பலருக்கும் மனதில் பல்வேறு கேள்விகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. புதிதாக வீடு கட்டலாம் என நினைப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். 

எம் சாண்ட் என்பது எப்படி தயாரிக்கிறார்கள்? #MSand

அதன் தயாரிப்பு முறை மற்றும் பயன்பாடு போன்ற நிலைகளில் கட்டுமான வல்லுனர்கள் அளித்துள்ள தகவல்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

தயாரிப்பு முறைகள் : .

பொதுவாக எம்-சாண்ட் என்பது கருங்கற்களிலிருந்து சரியான அளவுகளில் (2.36 மிமீ முதல் 4.75 மிமீ) இயந்திரங்களால் (Vertical Shaft Impact Crusher VSI)

நொறுக்கி.. பொடியாக்கி… பொடியை மணல் போல 150 மைக்ரான் அளவிற்கு உடைக்கப்பட்டு சலிக்கப்பட்டு தரமாக உருவாக்குகிறார்கள்.

அதிலிருந்து பொடியான நுண்ணிய துகள்கள் தண்ணீர் ஊற்றி முற்றிலும் கழுவப்பட்டு அதன் மீதுள்ள தூசு துப்புகள் முற்றிலும் அகற்றப்படுகிறது.

ஆற்று மணலில் இருக்கக்கூடிய வண்டல் மண், களிமண் துகள்கள், பிற பொருள்கள் போன்ற சிக்கல்கள் செயற்கை மணலில் கிடையாது.

இதில் உள்ள சிறப்பு என்ன என்றால், கல் கிடைத்தால் போதும் மணலை எங்கு வேண்டும் என்றாலும் உருவாக்கலாம். மணல் என்றால் இனி ஆற்றிற்கு போக வேண்டியதில்லை…

இப்படி கல்லை மணலாக்குவதால் ஆற்று படுகை மண் அள்ளப் படுவதை தடுக்கலாம். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம்.

மேலும் ஆற்றுபடுகைகளையும் பாதுகாக்கலாம். ஆற்று மணலை ஒப்பிடும் போது எம் சேண்ட்'ன் விலை மலிவானது தான்.

தாங்கு திறம் அதிகம் : .

எம் சாண்ட் என்பது எப்படி தயாரிக்கிறார்கள்? #MSand

எம்-சாண்ட் கலந்த சிமெண்டு கலவை மூலம் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் அமைப்பின் தாங்குதிறன் ஆற்று மணலின் தாங்கு திறனைவிட அதிகமாக இருப்பதை பல சோதனை முடிவுகள் குறிப்பிட்டுள்ளன.

நமது பக்கத்து மாநிலங்களான கேரளா, கோவா, அந்தமான், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளில் எம்-சாண்ட் பெரிதும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளில் பயன்பாடு : . 

மேலும், மத்திய கிழக்கு நாடுகளும் அவற்றின் கட்டுமானங்களில் பல ஆண்டுகளாக எம்-சாண்ட் பயன்படுத்துவதும் அறியப்பட்டுள்ளது.

செயற்கை மணல் பயன்படுத்தப்படும் சிமெண்டு கலவை மற்றும் கான்கிரீட் அமைப்புகளுக்கு பொறியாளர்கள் வழிகாட்டுதல் படி பிணைப்பு மற்றும் சிறப்பான கலவை தன்மைக்காக Super plasticiser ரசாயனம் பயன்படுத்தலாம். 

கிரஷர் டஸ்ட்- எம் சாண்ட் வித்தியாசம் : . 

எம் சாண்ட் என்பது எப்படி தயாரிக்கிறார்கள்? #MSand

கிரஷர் டஸ்ட் மற்றும் எம்-சாண்ட் ஆகிய இரண்டும் ஒன்று தான் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், அவை இரண்டும் முற்றிலும் வேறானவை.

கிரஷர் டஸ்ட் என்பது ஜல்லிகளை உடைக்கும் போது உருவாகும் கழிவு பொருள் ஆகும். அவற்றை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது கூடாது.

ஆனால் எம்-சாண்ட் என்பது மிகச்சிறிய ஜல்லி போல் உடைக்கப்பட்டு, தண்ணீர் தொட்டியில் சுற்றும் சல்லடை மூலம் அலசப்பட்டு, கிரஷர் தூசிகள் நீக்கி சுத்தமாக தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது.

பிளாஸ்டரிங் சாண்ட் : . 

எம்-சாண்ட் கான்கிரீட் கலவை உறுதியானது என்பது ஆய்வக சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆற்றுமணலில் இயற்கையாக உள்ள Chemical Impurities மாற்றுமணலில் இருக்காது என்பதால் எம்-சாண்ட் கலவையை உறுதியானது.

பூச்சு கலவையின் ஒட்டும் தன்மை சற்று குறைவாகவே இருக்கும். அந்த குறையை சரி செய்யும் வகையில் Fineness அதிகமுள்ள P-SAND (Plastering Sand) சந்தையில் கிடைக்கிறது.

நிற வித்தியாசம் : . 

எம் சாண்ட் என்பது எப்படி தயாரிக்கிறார்கள்? #MSand

பாறையின் மேலடுக்குகளில் கிடைக்கக் கூடிய வெளிர் நிறக்கற்களை அரைத்து வரக்கூடிய எம்-சாண்ட் சற்றே ஆற்று மணல் நிறத்தில் இருக்கலாம்.

பாறையின் கீழ் அடுக்குகளில் உள்ள கரும்பாறைகளை அரைத்து கிடைக்க கூடிய கருப்பு நிற எம்-சாண்ட் ஒப்பீட்டு அளவில் உறுதியானதாக அறியப்பட்டுள்ளது.

கான்கிரீட் அமைப்புகளுக்கு கருப்பு மணல் ஏற்றது. இயற்கை வளம் காக்கப்பட்டு நல்ல சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமானால் மாற்று கட்டுமான பொருட்களை பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அந்த வகையில், எம்-சாண்ட் என்ற மாற்று மணலை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி தரமான கட்டு மானங்களை அமைக்கலாம்.

இந்த வகையில் மணலை உருவாக்குவதில் உள்ள நன்மை என்ன?

ஆற்று படுகை மண்ணில் கலிமண் மற்றும் சிப்பிகள் நிறைய கலந்து இருக்கும். அவற்றை பிரித்து எடுக்க அவறறை சளிக்க வேண்டும்.

ஆனால் எம் சாண்டில் அந்த பிரச்சனை இல்லை… கல்லை சரியான அளவிற்கு பொடியாக்குகிறோம் அவ்வளவு தான்.

எம் சாண்டானது சுவர்களுக்கு அதிக வலிமையை கொடுக்கிறது மற்றும் சுவர் பாதிப்பை குறைக்கிறது… மேலும் அதிக நீரை உள்வாங்கும் தன்மையும் கொண்டது.

எம் சேண்டில் உள்ள பாதகங்கள் என்ன? 

எம் சாண்ட் என்பது எப்படி தயாரிக்கிறார்கள்? #MSand

ஈரப்பதம் குறைவாக இருப்பதால் அது அதிக நீரை உறிஞ்சும். விலை மலிவாக கொடுக்க பலர் எம் சேண்டில் தரமற்ற கற்களை கொண்டு கலப்படம் செய்கிறார்கள். 

ஆற்றுமணலை பூசுவதற்கு பயன்படுத்தினால் சுவர் நன்றாக இருக்கும். எம் சாண்ட்டை கல் வரி வைக்க பயன்படுத்தலாம்.

லாரி வைத்திருப்பவர்கள் முடிந்த அளவிற்கு TN-SAND என்ற தமிழக அரசின் மணல் புக்கிங் செய்யும் பக்கத்திற்கு சென்று ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.

எப்பொழுதும் தரமான மணலை தேர்ந்தெடுங்கள்… மேலும் மணல் தரமாக இருந்தால் வீட்டின் வாழ்நாள் அதிக ஆண்டுகள் வரும்.. மேலும் சுவர்களும் வெடிப்பு விடாது…

ஏனென்றால் வீடு என்பது வெறும் மண்ணாலும்' கல்லாலும் கட்டப்பட்டதல்ல…

அது உங்களின் பத்து வருட உழைப்பின் வடிவம்..!

Previous Post Next Post
COMMENTS... plz use me