அந்த உணவு ஆரோக்கி யமாகவும் சத்துள்ளதா கவும் இருந்தது. அவனுக்குத் தேவையான பலத்தைக் கொடுத்தது.
ஆனால் ஒரே பிரச்னை, அவனுக்குப் பசிக்கும்போ தெல்லாம்
உணவு கிடைக்க வேண்டுமே?
அப்படியே கிடைத் தாலும் அதைச்ச மைத்து முடிக்கிற வரை பசி தாங்க வேண்டுமே? மனிதனுக்கு ஒரு யோசனை வந்தது,
சமையலுக்குத் தேவையான காய்கறிகள், மாமிசம், பால், மற்ற உணவுப் பொருள்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் ரொம்ப நாளைக்குக் கெடாமல் பாதுகாத்து வைக்க முடியுமா?
இது கொஞ்சம் கஷ்டம் தான்.மனிதர்கள் எவ்வளவு கஷ்டப் பட்டு உணவுப் பொருள்களைப் பாதுகாத்தாலும்
அதனால் அந்தப் பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுப் போவிடும். ரொம்ப நாள் கழித்து, இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்தது, அது ஐஸ் பெட்டி!
நீங்கள் ஜூஸ் குடிக்கும் போது அதை ஜில் என்று மாற்றுவதற்காகச் சில ஐஸ் கட்டிகளைப் போடுகிறீர்கள்.
அதனால் உணவுப் பொருள்களை ஓரளவு பத்திரமாகக் காப்பாற்ற முடிந்தது. இதிலும் ஒரு பிரச்னை, அந்தக் காலத்தில் பனிக்கட்டிகளின் விலை ரொம்ப ரொம்ப அதிகம்.
பெரிய பணக்கா ரர்கள் மட்டும் தான் அதைப் பணம் கொடுத்து வாங்க முடியும்.
இந்தப் பிரச்னை களை எல்லாம் தீர்க்கிறது க்காகத் தான், ரெஃப்ரிஜிரேட்டர், சுருக்கமாய் ‘ஃப்ரிட்ஜ்’ என்று சொல்லப் படுகிற குளிர்பதனப் பெட்டியைக் கண்டு பிடித்தனர்.
இதுவும் கிட்டத்தட்ட ஐஸ் பெட்டி மாதிரி தான், ஆனால் நவீன தொழில் நுட்பத்தில் இயங்குகிற, பிரச்னையில்லாத ஐஸ் பெட்டி!
சரி. ஃப்ரிட்ஜுக் குள்ளே நுழைவோம். அதில் இருக்கிற முக்கி யமான பாகங் களைப் பார்ப்போம்.
1. குளிர்விக்கும் வாயுக்கள்
2. அழுத்தும் கருவி / கம்ப்ரஸர்
3. சுருக்கும் கருவி / கன்டென்ஸர்
4. அதிக வெப்பத்தை வெளி யேற்றும் திறப்புகள்
5. விரிவாக்கும் பகுதி
முதலில் இந்தக் குளிர் விக்கும் வாயுக் களைப் பற்றிச் சொல்ல வேண்டும். நம் உடலில் ரத்தம் திரும்பத் திரும்பச் சுற்றி வருகிறதில்லையா?
அதன் மூலம் உங்களுடைய உணவுப் பொருள் களைக் கெடாமல் வைத்திருக்கும்.
அதனால் இதை ரெஃப்ரிஜிரன்ட்ஸ் என்று சொல்வார்கள்.ஆரம்பத்தில் இந்த வாயுக்கள் குறைந்த அழுத்தம், குறைந்த வெப்ப நிலையில் இருக்கும்.
இதை கம்ப்ரஸர் என்ற அழுத்தும் கருவிக் குள்ளே அனுப்புவார்கள். இந்த கம்ப்ரஸர் மின்சாரத்தைப் பயன்படுத்தி, வாயுக்களுடைய அழுத்தத்தைப் படிப்படி யாக அதிகரிக்கும்.
இங்கே உங்கள் இயற்பியல் மூளையைத் தட்டி எழுப்புங்கள். ஒரு பொரு ளுடைய அழுத்தம் அதிகரிக்கும் போது அதன் வெப்பநிலை என்ன ஆகும்?
அழுத்தம் கூடக்கூட, வெப்ப நிலையும் கூடும். அது தான் ஃப்ரிட்ஜில் இருக்கிற கம்ப்ரஸருடைய வேலை.அடுத்து, கன்டென்ஸர் என்ற சுருக்கும் கருவி.
இப்படி ஒரு வாயு சுருங்கித் திரவமாக மாறும் போது, அதில் இருந்த கூடுதல் வெப்பம் ஏதாவது ஒரு வழியாக வெளியேற வேண்டு மில்லையா?
அடுத்து, இந்தத் திரவம் முழுவதும் இன்னொரு விரிவாக்கும் பகுதிக் குள்ளே நுழைகிறது.
அங்கே இருக்கிற காற்றைக் குளிர்ச்சி யாக்குகிறது, ஒட்டு மொத்த வெப்ப நிலையைக் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.
இப்படிச் செய்வதால், அந்தக் கலவையின் அழுத்தம், வெப்பநிலை இரண்டும் பழையபடி குறைந்து விடுகிறது.
இப்படி நாள் முழுக்கக் குளிர் விக்கும் வாயுக்களை அழுத்தி, சுருக்கி, விரி வாக்கி, மறுபடி அழுத்தி, சுருக்கி, விரிவாக்கி...
1. மினி, எல்லா ஃப்ரிட்ஜ்லயும் ஃப்ரீஸர் என்று ஒரு ஸ்பெஷல் பெட்டி இருக்கிறதே, அது எதற்காக?
பொதுவாக ஃப்ரிட்ஜுக் குள்ளே இருக்கிற வெப்பநிலை, 0 டிகிரி செல்சியஸை விடக் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
ஆனால் சில உணவுப் பொருள்க ளை இன்னும் ரொம்பக் குறைவான வெப்ப நிலையில் பராமரிக்க வேண்டியி ருக்கும், அந்த வேலையை ஃப்ரீஸர் செய்கிறது.
2. ஃப்ரிட்ஜ் பயன்படுத் துவதால் நம் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்று படித்தேன். உண்மையா மினி?
இது ஓரளவு உண்மை தான். முன்பெல்லாம் ஃப்ரிட்ஜில் இருக்கிற ‘க்ளோரோஃ ப்ளோரோ கார்பன்’ (CFC) என்ற ஒரு விசேஷ வாயுவைப் பயன் படுத்திக் கொண்டிரு ந்தார்கள்.
இதனால் நம் பூமியைச் சுற்றி இருக்கிற ஓசோன் மண்டலம் கடுமையாகப் பாதிக்கப் படுகிறது என்று தெரிய வந்தது.
அதனால், இப்போது CFC பயன் பாட்டைப் பெருமளவு குறைத்துவிட்டனர், கிட்டத்தட்ட நிறுத்தி விட்டனர் என்றே சொல்லலாம்.
ஃப்ரிட்ஜ் எல்லாவ ற்றிலும் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வேறு வாயுக் களைத்தான் பயன்படுத்து கிறார்கள்.. இனி கவலை இல்லை.