மின்சாரம் தேவைப்படாத குளிர்சாதனப் பெட்டி ! மின்சாரம் தேவைப்படாத குளிர்சாதனப் பெட்டி ! - ETbuild

மின்சாரம் தேவைப்படாத குளிர்சாதனப் பெட்டி !

மின்தடையால், குளிர்சாதனப் பெட்டிகள் இயங்குவதில்லை. கோடை காலம் என்பதால், பாக்கெட் பால் கெட்டுப் போகிறது. இந்தக் குறையைப் போக்க சூரிய குளிர்சாதனப் பெட்டிகள் உதவுகின்றன.
மின்சாரம் தேவைப்படாத குளிர்சாதனப் பெட்டி
இதனை இயக்குவதற்கு மின்சாரம் தேவை இல்லை. இந்த சூரிய குளிர்சாதனப் பெட்டியில், சூரிய வெப்பக்கலம் குளிர்விப்பான், குளிர்கலன் உள்ளன.

சூரிய வெப்பக்கலம் என்பது சூரிய ஆற்றலை, வெப்ப ஆற்றலாக மாற்றுகிறது.சூரிய குளிர்விப்பான் களில் மெத்தனால், கார்பன் ஆகியவற்றால் குளிர் உண்டாகிறது.
ரூ.15 லட்சம் பேசி விடைத் தாள்களை மாற்றினேன் - டி.என்.பி.எஸ்.சி.  ஊழியர் !
சூரியன் இருக்கும் போது மெத்தனால் ஏற்படுத்தும் வினையால் குளிர் உண்டாகிறது. சூரியன் இல்லாத போது கார்பன் ஏற்படுத்தும் வினையால் குளிர்ச்சி ஏற்படுகிறது.

வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்தும் வாயுக்களை வெளிப்படுத்தாத, குளிர்சாதனப் பெட்டியாக சூரிய குளிர் சாதனப் பெட்டி உள்ளது.

இந்தக் குளிர் சாதனப் பெட்டியால் 1 டன் எடையுள்ள பொருட்களையும் குளிரூட்ட முடியும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me