பழைய வகை மின்விசிறியின் வேகக்குறைப்பான் (Fan Regulator) உபயோகித்தால் மின்சாரம் உபயோகம் குறையாது.
ஆனால் வேகக்குறைப்பான் ஏற்படுத்தும் மின்தடையினால் அது தான் குறைத்த மின்னழுத்தத்தை உபயோகித்து கம்பிசுருள் அல்லது மின் தடுப்பானால் மின்சாரம் வெப்பமாக மாறிவிடும்.
இதனால் மின்னோட்டம் குறைவதில்லை. மின் அளவியில் அதே அளவு அல்லது கூடுதலாக மின் உபயோகம் பயன்படுத்தப்படுவதை காணலாம்.
இதை தவிர்க்க மின்னணு வேகக்குறைப்பான் (எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்) உபயோகித்து மின் விசிறியின் வேகத்தை குறைப்பதன் வாயிலாக மின்சாரம் வீணாவதையும் குறைக்கலாம்.
மின்னணு வேகக்குறைப்பான் நல்ல தரமானதாக இருந்தால் மட்டுமே வெப்பம் ஏற்படாமல் இருக்கும்.
பொதுவாக மின் உபயோகத்தில் மின்சுற்றில் எங்கு வெப்பம் ஏற்படுகிறதோ அங்கு மின்சாரம் தடுக்கப்பட்டு மின்சாரம் வெப்பசக்தியாக மாறி மின்சாரம் வீணாகிறது என்று அர்த்தம்.